வெனிசுலா நிலநடுக்கம்... 8 நாட்களுக்குப்பின்பு உயிருடன் மீண்டு வந்த நபர்

Earthquake Venezuela
By Manchu Jul 03, 2026 01:34 PM GMT
Report

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தினால் இடிந்த வணிக வளாக இடிபாடுகளில் சிக்கிய நபரை 8 நாட்களுக்கு பின்பு காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

வெனிசுலா நிலநடுக்கம்

வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்துள்ளது. இதில் மக்கள் பலரும் சிக்கி உயிரிழந்த நிலையில், ஒரு ஆறுதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

லா குவைரா கடலோரப் பகுதியில் உள்ள கலெரியாஸ் பிளாயா கிராண்டே வணிக வளாகம் இடிந்து விழுந்துள்ளது. இதில்  ஹெர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் என்ற 43 வயது நபர் இரவு நேர பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் குறித்த கட்டிட விபத்தில் சிக்கிய நிலையில், தற்போது 8 நாட்களுக்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அதாவது கட்டிடம் இடிந்து விழுந்த போதும், அதில் சிறிய கேபின் மட்டும் உடையாமல் இருந்துள்ளது.

வெனிசுலா நிலநடுக்கம்... 8 நாட்களுக்குப்பின்பு உயிருடன் மீண்டு வந்த நபர் | Venezuela Earthquake Man Rescued After 8 Days

“மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு”- அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்

“மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு”- அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்

8 நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்ட நபர்

அதுதான் குறித்த நபர் சுவாசிப்பதற்கான காற்றை வழங்கி நபரைக் காற்றியுள்ளது. கோஸ்டாரிகா நாட்டின் செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் இருந்து வந்த சத்தத்தை வைத்து நபர் சிக்கியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மீட்பு குழுவினரிடம், ஒருவேளை நான் இங்கியிருந்து உயிருடன் மீடகப்படாமல் இறந்துவிட்டால் தனது மனைவி தாங்க மாட்டார். எனவே நான் உயிருடன் இருக்கும் விடயத்தினை தற்போதைக்கு அவரிடம் கூற வேண்டாம் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளாராம்.

வெனிசுலா நிலநடுக்கம்... 8 நாட்களுக்குப்பின்பு உயிருடன் மீண்டு வந்த நபர் | Venezuela Earthquake Man Rescued After 8 Days

ஆனால் 8 நாட்களுக்கு பின்பு பத்திரமாக வெளியே கொண்டு வந்த பின்பு மனைவி அவரை சந்தித்துள்ளார். நம்பிக்கையிழந்து தவித்த எனக்கு அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது, இருண்ட வாழ்க்கையில் ஒளிக்கீற்றாக வந்துள்ளதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

குறித்த தம்பதிகளுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலா நிலநடுக்கம்... 8 நாட்களுக்குப்பின்பு உயிருடன் மீண்டு வந்த நபர் | Venezuela Earthquake Man Rescued After 8 Days