பிஸ்கெட்டை கொண்டு ஆம்லெட்.. கதிகலங்க வைத்த சம்பவம் -வைரல் வீடியோ!
Viral Video
India
By Vidhya Senthil
பிஸ்கெட்டை கொண்டு ஆம்லெட் செய்யப்படும் வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம்லெட்
சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான உணவு வகைகளின் செய்முறை குறிப்புகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது இணையத்தில் புதிதாக வெளியாகி உள்ள ஒரு உணவு தயாரிப்பு வீடியோ வலைத்தளவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில் சாலையோர உணவகத்தில் சூடான தோசைக்கல்லில் முட்டைகள் உடைத்து ஊற்றுகிறார்.அதன் பிறகு ஆம்லெட்டிற்கு தேவையான அனைத்தையும் சேர்த்த பிறகு கடைசியில் பிஸ்கெட் போட்டு வேக வைகிறார்.
பின்னர் வெந்த அந்த 'கிரீம் பிஸ்கெட்' ஆம்லெட்டை தனது ரசனைக்கேற்ப அலங்கரித்து வாடிக்கையாளர்களிடம் வழங்குகிறார். இந்த ஆம்லெட் பதிவு வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.