ஊரடங்கால் வருமானம் இழந்த சோகத்தில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிற நிலையில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் கொரோனா முடக்கத்தால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வியாபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திரு. வி. க. நகரில் கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திரு. வி. க நகர், மதுரைசாமி மடம் 3 வது தெருவில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியில ஆர்.எம்.எசன்ஸ் என்ற பெயரில் எசன்ஸ் மற்றும் பார்சல் கவர் விற்பனை கடை நடத்தி வந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு முடக்கத்தால் கடை திறக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது பெட்ரூமில் உள்ள பேன் கொக்கியில் வேட்டியால் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த திரு. வி.க நகர் போலீஸார் உடலை கைப் பற்றி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.