பாலா படப்ஹீரோ போல மாறிய சிம்பு ...அதிர்ச்சியில் ரசிகர்கள் வெளியானது வெந்து தணிந்தது காடு ஃபர்ஸ்ட் லுக்!
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.. சுரேஷ் காமட்சி படத்தின் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சுரேஷ் காமட்சி படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். யுவன்சங்கர் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.. இப்படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' என பெயரிடப்பட்டது.. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புதிய பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகி உள்ளதுதற்போது இந்த படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
#VendhuThanindhathuKaadu
— Silambarasan TR (@SilambarasanTR_) August 6, 2021
Directed by @menongautham
An @arrahman musical &
Produced by @VelsFilmIntl #VTK #SilambarasanTR pic.twitter.com/K2gobu2ZvQ
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அடையாளமே தெரியாத அளவுக்கு சிம்பு மாறி போயுள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலா படம் ஹீரோ போல சிம்பு மாறிவிட்டதாக பதிவிட்டு வருகின்றனர் .
முன்னதாக கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.. சிம்பு - கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையா படத்தின் பாடல்கள் ஹிட்டானாநிலையில் 3-வது முறையாக இணைந்துள்ள சிம்பு - கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.