வெந்து தணிந்தது காடு விஜய் படத்தின் காப்பியா ? - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு.
எடையினை குறைத்த சிம்பு
கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு 20 வயது இளைஞனாக நடித்துள்ளார். இதற்காக 15 கிலோ உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார் சிம்பு. இவருக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.
டான் சிம்பு
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இளைஞன் வேலைக்காக மும்பை சென்று, அங்கு எப்படி டான் ஆகிறார் என்பதே இப்படத்தின் கதைக்கரு.
இதில் சிம்புவின் தாயாராக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். வழக்கமான கவுதம் மேனன் படம் போல் இல்லாமல் புதுவிதமான படமாக இது அமைந்துள்ளது.
நெஞ்சினிலே
இந்த நிலையில், இப்படம் கடந்த 1999-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இரண்டு படங்களின் கதையும் ஒன்று தான் என்று ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். நெஞ்சினிலே படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இந்தி நடிகை இஷா கோபிகர் நடித்திருந்தார்.
Vtk படம் இல்ல விஜய் நடிச்ச நெஞ்சினிலே படம் தான்
— வன்ம கிச்சா (@itzcrazykichu) September 15, 2022
.
அப்படியே ரீமேக் பண்ணி வச்சு இருக்காங்க
.
க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் மாற்றம்.. pic.twitter.com/vzWK8EVzQG