சிம்பு ரசிகர்களுக்கு கிடைத்த நல்ல செய்தி... அப்ப ஜாலி தான் போலயே...
நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாநாடு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நடிகர் சிலம்பரசன், அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையா படங்களுக்குப் பிறகு சிலம்பரசன் - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
An exciting melodious 1st Single #KaalathukkumNeeVenum in the lyrics of #Thamarai from @SilambarasanTR_'s #VendhuThanindhathuKaadu will be out tomorrow (May 6th) at 6:30 PM !
— Vels Film International (@VelsFilmIntl) May 5, 2022
An @arrahman Musical
#VTK @menongautham @VelsFilmIntl @IshariKGanesh @rajeevan69 @Ashkum19 pic.twitter.com/gMA2qSUAxm
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோ பாடலாக 'காலத்துக்கும் நீ வேணும்' நாளை (மே 6) மாலை 6.30-க்கு வெளியாகவுள்ளது. தாமரை எழுதியுள்ள இந்தப் பாடல் திங்க் மியூஸிக் யூடியூப் சேனலில் வெளியாகிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிதி இட்னானி நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.