தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் விருப்பமனுதாக்கல் செய்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில், வருகின்ற தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட இன்று, பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில், தனது விருப்ப மனுவை தேர்தல் அதிகாரி செந்தில் அரசன் அவர்களிடம் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். விருப்ப மனுவை அளித்ததும் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்பி.வேலுமணி பேசுகையில், தமிழகத்தில் அற்புதமான திட்டங்கள் தந்து எளிமையான முதலமைச்சராக அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதியாக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அனைத்து குடும்பங்களுக்கும் வாஷிங் மெஷின், இலவச கேபிள் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளதுடன் எதை சொன்னாலும் நிறைவேற்றும் முதலமைச்சராக உள்ளார். இதனாலேயே மீண்டும் அவர் முதல்வராவது உறுதி. மேலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது.
யாரும் வாங்க முடியாத அளவிற்கு அதிக படியான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவேன். கோவைக்கு 50 ஆண்டுகளில் இல்லாத திட்டங்களை இந்த ஐந்து ஆண்டுகளில் செய்துள்ளதாகவும் தொண்டாமுத்தூர் தொகுதியில் அரசு கல்லூரி, தாலுகா அலுவலகம், மேம்பாலம், சாலைகள் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம், மக்களின் தேவைகளை அறிந்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளோம்.
மேலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒவ்வொரு குடும்பத்திலும் தம்பியாக அண்ணனாக இருந்ததால் ஒருங்கிணைந்து வாக்களிப்பார்கள் அதிக படியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.