இ.பி.எஸ் பேனர் அகற்றம்..!!"நா ரோட்ல உட்காரவா" - பெண் போலீசிடம் சீறிய எஸ்.பி.வேலுமணி..!!
கோவையில் நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இ.பி.எஸ் பேனர் அகற்றம்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுகவின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அவிநாசி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து காவல்துறையுடன் அதிமுகவினர் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.வேலுமணி வாக்குவாதம்
மாநாட்டு பந்தலை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேனர்கள் அகற்றப்பட்ட தகவல்கள் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரியுடன் வேலுமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோவையில் போலிஸ் அராஜகம் அண்ணன் நள்ளிரவில் வந்து களத்தில் இறங்கிய அண்ணன் வேலுமணி pic.twitter.com/9GeqgAPlBy
— DEV (@itsbalatweets) November 28, 2023
அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில் அவர், "நான் முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடாவாக இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்றும் எஸ்.பியை வரச்சொல்லுங்கள், நாங்கள் ரோட்டில் உட்கார்ந்தால் எஸ்.பி வருவாரா? என்றெல்லாம் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.