வீடு வீடாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
கோவை குனியமுத்தூர் பகுதியில் வீடு வீடாக நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும் வாக்குகளை சேகரித்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், அமைச்சர் எஸ்பி.வேலுமணி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் குனியமுத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சிறுவர்கள் சிலம்பாட்டம் நடத்தி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கு நடந்து சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிமுக ஆட்சி காலத்தில், மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் எடுத்து கூறி வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களான, அத்திக்கடவு அவிநாசி திட்டம், உயர்மட்ட மேம்பாலங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை அழகுப்படுத்தபட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர் வாரப்பட்டு, நீர் நிலைகளின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னும் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்துள்ளதாகவும், இன்னும் பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அரசு மக்களுக்கு செய்ய காத்திருப்பதாகவும் பேசினார்.