இனிமேல் நான் வெறும் சிம்பு இல்ல..டாக்டர் சிம்பு : கௌரவ டாக்டர் பட்டம் அறிவிப்பு

VendhuThanindhathuKaadu silambarasanTR velsuniversity doctorsimbu ஐசரி கணேஷ்
By Petchi Avudaiappan Jan 08, 2022 05:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

உலகமெங்கும் உள்ள  முன்னணி பல்கலைக்கழகங்கள் கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கௌரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' நடிகர் சிலம்பரசன் டி.ஆருக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 


இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். 

அந்த வகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன். 

நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கெளரவிப்பதன் பொருட்டே இந்த கெளரவ டாக்டர் என்கிற அங்கீகாரம்.அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி என ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.