பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்
வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஜோடிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச திருமணம் நடத்தி வைப்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் 9 ஜோடிகளுக்கு சிறப்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

விழுப்புரம், இராமநாதபுரம், சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 9 ஜோடிகளுக்கு, டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. உடன் டாக்டர் ஆர்த்தி கணேஷ் - இணை வேந்தர் வேல்ஸ் பல்கலைக்கழகம்..
திருமணத்திற்குப் பின்னர், தாய் வீட்டுச் சீர் வரிசையாக தங்கத் தாலி, வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு, வீட்டு உபயோக பொருட்கள், பூஜை பொருட்கள், மளிகைச் சாமான்கள் உள்ளிட்டவை.


இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக திருமணமான தம்பதிகளுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி முழுமையாக வேல்ஸ் கல்விக்குழுமங்களின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்.
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் நியாயம் கோருவது நியாயமற்றது! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலை : ஈபிடிபி, இராணுவமே காரணம்..! சிவாஜிலிங்கம் பகிரங்க குற்றச்சாட்டு IBC Tamil
டியாகோ கார்சியா விவகாரம்: ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் எச்சரிக்கையால் பிரித்தானியாவுக்கு அழுத்தம் IBC Tamil