தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது: வேல்முருகன்

tnelections2021 ElectionCommission velmurugan
By Irumporai Apr 14, 2021 12:24 PM GMT
Report

தேர்தல் முடிவினை மாற்றியமைக்க சதி நடப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குள் கணினி நிபுணர்கள் வந்து செல்ல ஏன் திடீர் அனுமதி வழங்கப்பட்டது என கேள்வியெழுப்பினார்.

தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது: வேல்முருகன் | Velmurugan Tnelections2021 Electioncommission

மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பாடம் நடத்த 3 கணினி நிபுணர்கள் அனுமதித்து உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்த வேல்முருகன் கணினி நிபுணர்கள் அனுமதித்தது பற்றி மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகாரை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.