2 கிராம் தங்கத்துக்காக.. கூத்தாடியை கட்டி பிடிக்க.. வேல்முருகன் பகீர்!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Jun 04, 2025 08:30 AM GMT
Report

விஜய்யை தவாக வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் சந்திப்பு

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகளை வரவழைத்து அவர்களுக்கு விருந்தளித்து பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி தவெக தலைவர் விஜய் ஊக்குவித்து வருகிறார்.

velmurugan - vijay

அந்த வகையில் ன்று இரண்டாவது கட்டமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்து வருகிறார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவரான வேல்முருகன்,

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் - திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய்

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் - திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய்

வேல்முருகன் சர்ச்சை பேச்சு

" இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டாப் பயலுக.. நான் நடிகனை குறை சொல்ல மாட்டேன். ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறான். இன்னும் ஓரிரு மாதங்களில் பிளஸ் டூ முடித்து, டிகிரி முடிக்க இருக்கும் கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண்ணை, நாளை மாற்றான் வீட்டுக்கு மனைவியாக போகிற பெண்ணை.. அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது, ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க.

இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க ஆனால் இப்படி செய்யக்கூடாது” எனப் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.