"ஆளுநருக்கு அதிகாரமே இல்லை" - பேரவையில் வேல்முருகன் ஆவேசம்

governor neet velmurugan
By Irumporai Feb 08, 2022 07:20 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையது அல்ல என்றும், தமிழக சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையது அல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் விலக்கு மசோதாவை ஏகமனதாக நிறைவேறி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பிவைத்தது.

இதனை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்காமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்ட ஆளுநர், பிப்ரவரி 3ஆம் தேதி சட்டப்பேரவைக்கே திருப்பியனுப்பினார். இதன்பிறகு 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.   

இந்த நிலையில்  சட்டப்பேரவை இன்று  ஆளுநரின் விளக்க கடிதம் குறித்து சபாநாயகர் அப்பாவு விவரித்தார். அதற்கு பின் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து சிறப்பு விவாதத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினர்.

"ஆளுநருக்கு அதிகாரமே இல்லை" - பேரவையில் வேல்முருகன் ஆவேசம் | Velmurugan Says Governor Has No Power

அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், "சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில், தமிழக சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையது அல்ல எனக் கூறினார்.

மேலும், 8 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட மசோதாவை ஆளுநர் சட்டப்பிரிவு 224-ன் படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதுவே அவருடைய கடமை. மத்திய அரசுப் பட்டியலிலோ, பொதுப்பட்டியலிலோ இருக்கும் விவகாரம் தொடர்பான மசோதாவை மீண்டும் மாநில அரசுக்கே அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினார்.

மேலும் ஆளுநரின் இந்த செயல் அரசியல் சாசனத்தை மீறும் செயல் எனக் கூுறிய வேல்முருகன் , பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு என்ற நடவடிக்கையால்தான் இன்று கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கிறதே தவிர, நீட் தேர்வால் அல்ல. ஆகவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்எனக் கூறினார்.