முகமது நபியை இழிவாக பேசியவ்ர்கள் அரைவேக்காடுகள் : வேலூர் இப்ராஹிம்
பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் டிவி மற்றும் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசினர்; பதிவிட்டனர்.
இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுவரை இல்லாத வகையில் பாஜகவினரின் இந்த விமர்சனம் சர்வதேச விவகாரமாக வெடித்திருக்கிறது. இஸ்லாமிய நாடுகள் பெரும்பாலும் பாஜக தலைவர்களின் கருத்துகளுக்காக இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
இதனால் வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை அளித்திருக்கிறது. அத்துடன் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
நவீன் ஜிண்டால் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இந்த விவகாரம் இப்போதைக்கு ஓய்வதாக இல்லை. இந்த நிலையில் இந்த விவாகரம் குறித்து பேசுவதற்காக பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் ஐபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்காக