மரணமடைந்த இளைஞரின் உடலை கொடுக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம்: வேலூரில் பரபரப்பு
வேலூரில். நாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக ஒப்படைக்காததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த நேரு, இவரது மகன் சரத்பாபு(23) இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் கடந்த மாதம் சரத்பாபுவை கடித்துள்ளது.
காயமடைந்த சரத்பாபுவுக்குதடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்பாபு நண்பர்களுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து குளித்துள்ளார்.
அப்போது திடீரென ஜன்னி ஏறிய நிலையில் சிகிச்சைக்காக கடந்த 18-ம் தேதி வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அபோதுதான் சரத்பாபு ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் (19.04.2021) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சரத்பாபு. இறந்து ஒரு நாட்களுக்கு மேல் ஆகியும் மருத்துவமனை நிர்வாகம் உடலை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும், உடலை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் சரத்பாபுவின் உறவினர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சமதானப்படுத்தி சரத்பாவுவின் உடலை ஒப்படைத்தனர். இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் சரத்பாபுவின் உடல் ஆம்பூலென்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள எரிமேடையில் மாநகராட்சி ஊழியர்களால் எரியூட்டப்பட்டது.
நாய் கடித்து இளைஞர் உயிரிழந்ததாலும், அவரது உடலை கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாலும் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.