வேலூரில் சோகம் .. கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர் பலி!
கொரோனா தொற்றுக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனை செவிலியர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் எழிலரசி (40) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானதால். குடியாத்தம் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனி இன்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிகழ்வு பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆரம்ப கட்டத்தில் கொரோனா வார்டில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.