வேலூர் ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு, ஒருவர் கைது
vellore
jos alukkas
jewel burglary
one arrested
jewels recovered
By Swetha Subash
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டதுடன், கொள்ளையில் ஈடுப்பட்ட ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைரம் கொள்ளை போனது.
போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடிவந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகையானது உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து நகைகளை காவல் துறையினர் தோண்டி எடுத்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒடுக்கத்தூர் அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.