ஆங்கிலேயர் காலத்தில் புரட்சி ஏற்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க பகுதி வேலூர் மாவட்டம்!

Tamil nadu Vellore
By Vinothini Aug 29, 2023 11:12 AM GMT
Report

தென்னிந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான வேலூர் பற்றி பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம்

வேலூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை மற்றும் அதில் உள்ள கோவிலாகும். இது பெருமளவு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகும். வேலூரில் பாலாறு மற்றும் பொன்னாறு ஆகிய 2 ஆறுகள் இங்கு ஓடுகின்றன. இங்கு உள்ள சர்ச் ஒன்று பழைய இடுகாடு ஒன்றில் கட்டப்பட்டுள்ளது.

vellore-history-in-tamil

மாவீரன் திப்பு சுல்தான் கிபி1799இல் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை எங்கு உள்ளது இந்த நினைவிடம் கிபி 1806 நடந்த' வேலூர் கழகத்திற்கு' சாட்சியாக உள்ளது.

vellore-history-in-tamil

மாவீரன் திப்பு சுல்தான் இரண்டாவது மகன் தலைமையில் நடந்த இந்த விடுதலை எழுச்சி ஆற்காட்டில் இருந்து சென்ற ஆங்கிலேயரின் அதிரடிப்படையால் தான் முறியடிக்க முடிந்தது. வேலூர் சென்னையிலிருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.வேலூரின் மொத்த பரப்பளவு 6,077 சதுர கிலோமீட்டர்.

வரலாறு

வேலூரின் ஒரு பகுதியாக உள்ள வேலப்பாடி என்ற பெயர் 'வேலூர்' ஆயிற்று என்பர். இந்த ஊர் கிபி 16ம் நூற்றாண்டில் நாயக்கர் தலைவர்களின் ஆட்சி இடமாக இருந்தது. இவர்கள் விஜயநகர அரசு ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர். வேலூரில் ஆட்சி புரிந்த நாயக்க தலைவர்களில் முக்கியமானவர்கள் சின்ன பொம்மன், லிங்கமன் ஆவார். லிங்கம நாயக்கர் விஜயநகர அரசுக்கு கப்பம் கட்டாமல் ஆட்சிபுரிய தொடங்கவே, கிபி 1604 இல் முதலாம் வேங்கடன் என்ற சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர் வேலூரில் மீது படையெடுத்து வென்றார்.

vellore-history-in-tamil

லிங்கமர் கைதானார். கிபி 1606 முதல் சதுரகிரியில் இருந்த விஜயநகர வம்ச மன்னர்கள் வேலூரை தங்கள் ஆட்சி இடமாகக் கொண்டனர். இதுமுதல் வேலூர் 'ராயவேலூர்' ஆயிற்று. கிபி 1647 இல் மீர் ஜம்லாவின் தலைமையிலான படைகள் வேலூரை பிடித்தன. இதனால் விஜயநகர அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் வேலூரை விட்டுச் சென்றார்.

கிபி 1676ல் மராட்டியர்கள் ஆண்டனர், கிபி 1710ல் தாவுத் கான் என்ற முகலாய தளபதி தில்லியிலிருந்து வந்து மராத்தியரை வேலூரிலிருந்து அகற்றினார். இதனால் வேலூர் முகலாயர் ஆட்சிக்கு உட்பட்டது. வேலூர், ஆற்காடு நவாப் ஆட்சியின் கீழும் பின் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழும் வந்தது. வேலூர் தற்பொழுது வட ஆர்க்காடு மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.

வேலூர் கோட்டை

வேலூர் என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் வருவது வேலூர் கோட்டை ஆகும். இக்கோட்டையின் பிரதானமாக உள்ள கோட்டை மேடையானது, வட்ட கோபுரங்கள், செங்கோண மாடங்கள் போன்றவற்றால் சீரற்ற இடைவெளிகளை கொண்டுள்ளது. கோட்டை சுவர்கள் உட்பொருந்தும் செங்கோண கற்களால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் வேலூர் கோட்டை சிறப்புமிக்க ஒன்றாகும்.

vellore-history-in-tamil

இக்கோட்டை கிபி 1274 - 1283 இல் ஆந்திராவைச் சேர்ந்த பொம்மி ரெட்டி என்பவரால் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இதை கட்ட இவர் இத்தாலிய பொறியியல் வல்லுனர்களின் உதவியையும் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. வேலூரைத் தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த நாயக்க தலைவர் சின்ன பொம்மன் கோட்டையைப் பலப்படுத்தினார். இக்கோட்டை இராணுவ முக்கியத்துவம் பெற்றதாக விளங்கிற்று.

vellore-history-in-tamil

இக்கோட்டை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இராணுவ கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோட்டை விளங்குகிறது. வேலூர் கோட்டையின் உட்பகுதியில் ஒரு மசூதியில் கிறிஸ்தவ தேவாலயமும் உள்ளன. கோட்டை பகுதியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களும் நீதிமன்றங்களும் இதர சில அலுவலகங்களும் உள்ளன.

வேலூர் சிப்பாய் கழகம்

1805ல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார்.

vellore-history-in-tamil

சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. இதற்கிடையில், வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் தூண்டி விட்டதாகச் சொல்லப் படுகிறது.

vellore-history-in-tamil

1806 அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர். அதனால் ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்டனர், அதில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்தியத் துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் மிக முக்கியமாக பேசப்பட்ட நிகழ்வாகும்.

வேலூர் சிறைச்சாலை

வேலூர் சிறைச்சாலை 19.3.1867-ல் 160 கைதிகளுடன் துவங்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் பெரிய சிறைச்சாலை. இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்த வினோபாபாவே, கர்மவீரர் காமராஜர் போன்ற தேச பக்தர்களும் மொழி போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அறிஞர் அண்ணாவும் இருந்த சிறப்பு பெற்ற சிறைச்சாலை இது.

vellore-history-in-tamil

ஆங்கிலேய ஆட்சியின்போது அந்தமானுக்கு அடுத்தபடியாக மிகக் கொடிய சிறைச்சாலையாக கருதப்படுகிறது. இங்குள்ள கடுங்காவல் கைதிகளின் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இந்த சிறைச்சாலை செலவுகள் ஈடு செய்யப்படுகின்றன.

வழக்கு விசாரணை செய்திகள் மற்றும் நாவல் செய்திகளுக்கு என்று சிறைச்சாலை ஒன்று இதனுடன் இணைந்து உள்ளது. காவல் செய்திகளுக்காகவும், விசாரணைக்கு பெண்களுக்க் துணை சிறை ஒன்று மத்திய சிறைச்சாலை உடன் சேர்க்கப்பட்டுள்ளது.

கலாச்சாரம்

வேலூர் மாவட்டம் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது மற்றும் பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பட்டு நெசவு, மட்பாண்டங்கள் மற்றும் கூடை உள்ளிட்ட பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு இந்த மாவட்டம் பெயர் பெற்றது.

vellore-history-in-tamil

புகழ்பெற்ற குற்றாலம் நாட்டிய விழாக்களில் நிகழ்த்தப்படும் இசை மற்றும் நடனத்தின் வளமான பாரம்பரியமும் இந்த மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களும் உள்ளன.

ஜலகண்டேஸ்வரர் கோவில்

இக்கோவிலின் சில பகுதிகள் கிபி பதினாறாம் நூற்றாண்டில் வேலூரை ஆட்சி புரிந்த சின்ன பொம்மி நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டன. பிற்கால விஜயநகர கலை அம்சத்தை இக்கோவில் கொண்டுள்ளது. பிஜப்பூர், மராத்திய படையெடுப்பினால் இக்கோவில் சிதைவுற்று கருவறை தெய்வங்கள் அகற்றப்பட்டனவாகத் தெரிகிறது.

vellore-history-in-tamil

இக்கோவிலின் அருகே தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டபம் கலைநயத்துடன் கட்டப்பட்டது, அக்கால கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை வேலை திறனுக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளன. இம்மண்டபத்திலுள்ள கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ள குதிரை வீரர்களின் சிற்பங்கள் யாவும் சிறந்த கலை கருவூலமாகும். 

vellore-history-in-tamil