தேங்காய் உறித்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஜி. பரிதா!
குடியாத்தம் தொகுதியில் தேங்காய் உறித்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார் அதிமுக வேட்பாளர் ஜி. பரிதா. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி தொகுதிக்கு, அதிமுக கட்சி சார்பில் ஜி.பரிதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இவருடன் கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜி.பரிதா குடியாத்தம் மாச்சம்பட்டு பாலூர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது மாச்சம்பட்டு பகுதியில் தேங்காய் உறிப்பவர்களிடம் வாக்குகளை சேகரித்த பரிதா, திடீரென தானும் தேங்காய் உறித்து கொடுத்து அசத்தினார். மேலும் தேங்காய் உறித்த படியே மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால் வேட்பாளர்கள் பல்வேறு நூதன முறையில் வாக்கு சேகரிப்பது மக்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது.