சிறுவன் மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் பிழைத்த அதிசயம்! பதைபதைக்கும் வீடியோ!
accident
vellore
By Anupriyamkumaresan
வேலூர் அருகே 1-ம் வகுப்பு பள்ளி மாணவன் மீது மோதிய மினி டிப்பர் லாரியில் இருந்து நூலிழையில், தப்பிய சிறுவனின் பதைபதைக்கு வீடியோ காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியில் பலமனேரி நெடுஞ்சாலையில் 6 வயது சிறுவன் ஒருவன் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளான்.
அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரி ஒன்று சிறுவன் மீதி மோதி இழுத்து சென்றது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, சிறுவன்
டயருக்கு அடியில் இருந்து எந்த காயமுமின்றி பத்திரமாக மீண்டான். இந்த வீடியோ காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்கிறது.