2 இளைஞர்கள் கொடூரமாக கொலை - உடலை கல்லில் கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இரு இளைஞர்களை கொலை செய்து உடலை கல்லில் கட்டி ஆற்றில் வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விஜய், நேசகுமார் இருவரையும் கடந்த 10ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர்களின் நண்பர்களான பாலா, சரத், ரோகித் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
6 பேரும் ஒன்றாக கஞ்சா புகைத்ததும் அப்போது ஏற்பட்ட தகராறில் விஜய், நேசகுமார் ஆகிய இருவரையும் அடித்து கொலை செய்து உடல்களில் கல்லை கட்டி ஆற்றில் வீசியதும் தெரியவந்தது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இருவரின் உடல்களை மீட்பதில் காவல் துறையினருக்கு சவால் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கைதான 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.