அந்த சிரிப்பால் பிரபலமான வேலம்மாள் பாட்டி மறைவு - முதலமைச்சர் இரங்கல்!
புன்னகையால் பிரபலமான வேலம்மாள் பாட்டி மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வேலம்மாள் மறைவு
கன்னியாகுமரி, கீழாலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி(92). ஊரடங்கின் போது அரசு வழங்கிய நிவாரணத் தொகையை பெற்ற இவரின் புகைப்பட்டம் பெரும் வைரலானது. அதில் அவரது புன்னகை அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து, அரசு விளம்பரங்களில் இடம் பிடித்து வந்தது. மேலும், 'ஏழைத்தாயின் சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு மழை பாதிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவருக்கு அரசு சார்பில் அஞ்சு கிராமம் பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது.
முதலமைச்சர் இரங்கல்
இந்நிலையில் வேலம்மாள் பாட்டி கடந்த சில தினங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.