வேலுடன் பிரச்சாரம் செய்ய உள்ள ஓ.பி.எஸ்- பூஜைபோட்ட ஜெயபிரதீப்- சூடாகும் தேர்தல் களம்!
சட்டசபைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார் . இதற்காக அவரது பிரத்யோக வாகனம் தயார் செய்யப்பட்டு, திருப்பதியில் பூஜை செய்யப்பட்டது. இதுதான் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தலைகாட்டாமல் இருந்த ஓ.பி.எஸ், சசிகலா பக்கம் சாய்ந்துவிடுவாரோ என எதிர்கட்சியினர் உட்பட அனைவரும் நினைத்தனர். ஆனால், சென்னை வந்த பிரதமர் மோடி, ஓ.பி.எஸ்,ஈ.பி.எஸ் கைகளைப் பிடித்து ஒன்றாக புகைபடம் எடுத்தன் மூலம் ஓ.பி எஸ் தேர்தல் முடியும் வரை தர்மயுதத்தை எடுக்கமாட்டர் என நிம்மதியடைந்தனர் கட்சி நிர்வாகிகள் ஓ.பி.எஸ் எப்போது பிரசாரத்தை துவங்குவார் என்ற கேள்வி எழுந்துவந்த நிலையில் .
நான் உரிய நேரத்தில், உரிய முறையில் பிரசாரத்தை தொடங்குவேன் என சமீபத்தில் தேனியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் கூறினார் ஓ.பி.எஸ். இந்த நிலையில், தமிழகம் முழுக்க பிரசாரம் செய்ய இருக்கும் வாகனத்தை தயார் செய்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன், அதனை எடுத்துச் சென்று, திருப்பதியில் சிறப்பு பூஜை செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.TN 60 AL 2345 என்ற பதிவு எண் கொண்ட ஓ.பி.எஸ் பிரசார வேனில், மஞ்சள் நிறத்தில் வேல் படம் வரையப்பட்டுள்ளது.

அதனைக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்துவருகிறது.இந்நிலையில், எப்போதும் இடம் பெறாத வேல் படம், இப்போது ஏன் என்ற கேள்விக்கு வேல் வரைவதில் என்ன தவறு இருக்கிறது? வெற்றி வேல் வீர வேல் என்பார்கள். எடுத்த காரியம் வெற்றியுடன் முடியவே, வேல் படம் வரையப்பட்டுள்ளது என கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இந்த முறை தேர்தல் களத்தில் இறங்க, ஓ.பி.எஸ் மட்டுமல்ல அவரது பிரசார வேனும் வேலுடன் தயாராகிவிட்டது.
((கட்டுரை ஆதாரம்: விகடன்))