இ பாஸ் இல்லாமல் கொடைக்கானல் வரும் வாகனங்கள்!
கொடைக்கானல் பகுதிக்கு இ-பாஸ் இல்லாமல் வரும் வெளிமாவட்ட வாகனங்களை அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர் .
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.
இதில், நீலகிரி,கொடைக்கானல்,ஏற்காடு,குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பயணிகள் இ-பாஸ் அனுமதி பெற்று பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது .
இந்நிலையில் இ-பாஸ் பெறாமல் ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது .
இதனையடுத்து கொடைக்கானல் வெள்ளிநீர் வீழ்ச்சி நுழைவாயில் சோதனை சாவடியில் வருவாய் துறை,நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுஇ -பாஸ் இல்லாமல் சுற்றுலாவுக்காக வந்த பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.