பழைய வாகனங்கள் வாங்குபவர்கள் கவனத்திற்கு...!

Central government Vehicle scarbbing policy
By Petchi Avudaiappan Jul 22, 2021 02:23 PM GMT
Report

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையினரின் மிக முக்கிய கோரிக்கையாக இருந்த வாகன அழிப்பு திட்டம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய அரசு பழைய மற்றும் குறைபாடுள்ள வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாசுபாட்டை குறைக்கவும் இந்த வாகன அழிப்பு திட்டம் பயன்படும் என கூறியுள்ள நிலையில், இதனால் அரசின் ஜிஎஸ்டி சுமார் 40,000 கோடி ரூபாய் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். அதன்படி தனிநபர் வாகனங்களுக்கு 20 ஆண்டுகள், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் என இந்த ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பழைய வாகனங்கள் வாங்குபவர்கள் கவனத்திற்கு...! | Vehicle Scarbbing Policy Implement From 2021

குறிப்பாக உற்பத்தியாளர்கள் ஸ்கிராப்பிங் செய்து புதிய வாகனத்தை பெறும்போது ஐந்து சதவீதம் தள்ளுபடியும்,பழைய வாகனங்களை தாமாக முன்வந்து ஸ்கிராப்பிங்காக கொடுப்பவர்களுக்கு புதிய வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலையில் சுமார் 4 - 6% இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் தனி நபர் வாகனங்களுக்கு 25% வரையிலும், வர்த்தக வாகனகளுக்கு 15% வரையிலும் வரி சலுகை அளிக்கப்படலாம் என்றும்,பழைய வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், அவற்றை, தொடர்ந்து பயன்படுத்த அவை முதலில் பயன்படுத்த தகுதியானவை என நிரூபிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக பொது போக்குவரத்தை தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து ஆட்டோமொபைல் தொழில் மெல்ல மீண்டு வந்தது.

பழைய வாகனங்கள் வாங்குபவர்கள் கவனத்திற்கு...! | Vehicle Scarbbing Policy Implement From 2021

தற்போது இந்த வாகன அழிப்பு திட்டம் நிச்சயம் ஆட்டோமொபைல் தொழில்துறையில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் சில பழைய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பாரம்பரியமானது என கூறி விற்பனை செய்வது, அதனை பொதுமக்கள் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வாகன துறையில் உள்ள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இதற்கு குறிப்பிட்ட காலம் பிறகு பிட்னஸ் சான்றிதழ் கிடைக்காவிட்டால் நீங்கள் அதிகளவிலான பணத்தை இழக்க நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.