சைவ முதலையின் இறப்பிற்கு கண்ணீர் விட்ட கிராம மக்கள் : காரணம் என்ன தெரியுமா?

Kerala Viral Photos Death
By Irumporai Oct 10, 2022 07:34 AM GMT
Report

கேரளாவில் சைவ உணவை விரும்பி உண்ணும் பபியா என்னும் முதலை உயிரிழந்த சம்பவம் ,சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சைவ முதலை

கேரளாவில் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரா என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் வளாகத்திற்குள் உள்ள குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வாழ்ந்து வந்தது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதங்களை அந்த முதலைக்கு வைத்து , அதனையும் வழிபட துவங்கினர்.

பொதுவாக முதலைகளுக்கு மாமிசங்கள்தான் உணவாக இருக்கும் , ஆனால் இந்த முதலை பக்தர்கள் வைக்கும் புளி சோறு , பொங்கல் சோறு என சைவ உணவுகளை பிரியமாக சாப்பிடும் என கூறுகின்றனர் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள்.

முதலை இறப்பு பொதுமக்கள் சோகம்

 பபியா என பெயர் வைத்து அழைக்கப்பட்ட இந்த முதலையை பெருமாளின் தூதர் என சிலர் நம்புகின்றனர். இந்த நிலையில் 75 வயதான பபியா முதலை இந்தியா முழுவதும் பிரபலமான நிலையில்  பபியா முதலைஉயிரிழந்துள்ளது இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இறந்து போன முதலையான பபியாவுக்கு அந்த பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.