சைவமா ... அசைவமா ? அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு என்ன விருந்து தெரியுமா?

O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Jun 23, 2022 06:17 AM GMT
Report

அரசியல் கட்சிகளின் பொதுக்குழுவில் பொதுவாக அசைவ விருந்து தடபுடலாக பரிமாறப்படும். பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ளும் தொண்டர்கள் கூட்ட முடிவில் விருந்து சாப்பிடுவதில் பெரிதும் விருப்பப்படுவார்கள்.

சைவமா ... அசைவமா ? அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு   என்ன விருந்து தெரியுமா? | Vegetarian Or Non Vegetarian In Aiadmk

இந்த நிலையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை யாருக்கு என்ற கேள்வி ஒரு புறம் இருக்க இன்று அதிமுகபொதுக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிர்வாகிகளுக்கு என்ன விருந்து எனப் பார்க்கலாம்.

காலை டிபன்

இன்றைய பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு தயார் செய்யப்பட்டிருக்கிறது. காலையிலேயே அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வரத் தொடங்கி விட்டதால் அவர்களுக்காக காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயிரம் பேருக்கு காலை உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. இட்லி, பொங்கல், வடையுடன் காலை உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவு மதிய உணவு மொத்தம் 4000 பேருக்கு தயாராகிக் கொண்டுள்ளது.

மதிய உணவாகவும் சைவ உணவே தயாரிக்கப்பட்டுள்ளது. வெஜிடபிள் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, 4 வகை கூட்டு காலி ஃப்ளவர் பக்கோடா என மதிய விருந்து தயாராக உள்ளது.

சைவமா ... அசைவமா ? அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு   என்ன விருந்து தெரியுமா? | Vegetarian Or Non Vegetarian In Aiadmk

அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்ளும் நிலையில் பொதுக்குழு கூட்டம் சுமுகமாக நடைபெறுமா?

கூட்டத்தின் முடிவில் அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவு அருந்துவார்களா? என்ற கேள்விகள் தற்போதைய நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.