கெட்ட கொழுப்பை அடியோடு விரட்டும் காய் எது தெரியுமா?
இன்றைய சூழலில் வீடுகளில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதை தாண்டி கடைகளில் சுவையான உணவை சாப்பிடுவதை தான் மக்கள் பலரும் விரும்புகிறார்கள். அதனால் பல நேரங்களில் அவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு விடுகிறது.
இவ்வாறு அடிக்கடி வெளியே சாப்பிடுவதால் கடைகளில் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் போன்றவை நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக அதிகரித்து விடுகிறது. இதனால் இதய நோய் உயர் ரத்த அழுத்தம் போன்றவை நாம் சந்திக்க நேருகிறது.
அந்த வகையில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு சிலர் மாத்திரைகள் எடுக்கக்கூடிய நிலையும் உள்ளது. அந்த வகையில், நம்முடைய உணவிலே கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு இந்த ஒரு காய்கறிகளை நாம் தினமும் சேர்ந்து வரும் பொழுது நல்ல மாற்றத்தை பெறலாம். அதைப்பற்றி பார்ப்போம்.

காய்கறிகளில் முள்ளங்கி நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்திருப்பதால் நம் உடலை மிகுந்த ஆரோக்கியத்தோடு வைத்திருப்பதை இவை உறுதி செய்கிறது.
இதை ஒருவர் தொடர்ந்து முறையாக சாப்பிட்டு வரும்பொழுது அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகளில் இருந்து அவர்கள் பாதுகாக்கிறது. அதாவது முள்ளங்கியில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நரம்புகளில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களை அவை அகற்ற நமக்கு உதவுகிறது.

அதனால் நமக்கு வருங்காலங்களில் இதய நோய் வராமல் அவை தடுத்து பாதுகாக்கிறது. மேலும், முள்ளங்கி இயற்கை நச்சு நீக்கியாகவே செயல்படுகிறது. ஆதலால் நம் உடலில் உள்ள நச்சு மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
ஆக, கெட்ட கொழுப்புகளால் துன்பப்படுபவர்கள் நிச்சயம் இந்த ஒரு காய்கறிகளை நீங்கள் தினமும் சேர்த்து வர உடலில் நல்ல மாற்றத்தை நீங்கள் வெகு விரைவில் காணலாம்.