இந்துக்களே உங்கள் வீடுகளில் கத்திகளை கூர்மையாக வைத்திருங்கள் : பாஜக எம்பி சர்ச்சை பேச்சு
உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். எதுவுமில்லை என்றால் குறைந்தபட்சத்தில் காய்கறிகளை வெட்டும் கத்திளையாவது கூர்மையாக வைத்திருங்கள் என பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரக்யா சிங் தாக்கூர்
மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி எம்பியான பிரக்யா சிங் தாக்கூர் கூறுகையில் : லவ் ஜிஹாத் எனும் பாரம்பரியம் இருக்கிறது. அவர்கள் அதனை நேசிக்கிறார்கள். நாமும் இந்து கடவுளை நேசிக்கிறோம். ஒரு சன்யாசி துறவி தனது கடவுளை நேசிக்கிறார். எனவும் குறிப்பிட்டார்.

கத்திகளை கூர்மையாக வைத்திருங்கள்
மேலும் உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். எதுவுமில்லை என்றால் குறைந்தபட்சத்தில் காய்கறிகளை வெட்டும் கத்திகளாவது கூர்மையாக வைத்திருங்கள்.
எங்களைத் தாக்குகிறார்கள். தகுந்த பதிலடி கொடுப்பது நம் உரிமை. எனவும் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர்.