1000 கோடி ஊழல் செய்தாரா அண்ணாமலை? திடீரென டார்கெட் மாற்றிய வீரலட்சுமி!!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Oct 22, 2023 11:37 AM GMT
Report

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து தனது குற்றசாட்டை வைத்து வந்த வீரலட்சுமி தற்போது தனது கவனத்தை அண்ணாமலை பக்கம் திரும்பியுள்ளார்.

வீரலட்சுமி

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சில மாதங்களாக சீமான் - விஜயலக்ஷ்மி விவகாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். சீமான் விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில், தற்போது தனது கவனத்தை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பக்கம் அவர் திருப்பியுள்ளார்.

veerlakshmi-annamalai-1000-crore-scam

வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணியின் பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் லஞ்ச, ஊழல்,பினாமி கருப்பு பணம் மூலமாக 600 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளனர் என குற்றம் சாட்டி இருக்கின்றார்.

அண்ணாமலைக்கும் பங்கு உண்டு

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்ததாக குறிப்பிட்டு, அதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த விவகாரத்தில் அவர்களுக்கு பக்க பலமாக அண்ணாமலை இருக்கிறார் என தெரிவித்தார்.

இந்தப் பணத்தில் வரும் பங்கு அவருக்கும் செல்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டிய வீரலட்சுமி, இந்த விவகாரத்தில் மூன்றாவது முறையாக அண்ணாமலை மீதும் சேர்த்து வரும் வியாழக்கிழமை புகார் அளிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

veerlakshmi-annamalai-1000-crore-scam

இதில் ஏன் அண்ணாமலை பெயரையும் சேர்க்கிறோம் என்றால் பெங்களூரு-சென்னை சாலையில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் விஞ்ஞான ஊழல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் குற்றம்சாட்டி, இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்காக ஆவணங்களை திரட்டி புகார் கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

அந்த வகையில், மாலினி ஜெயச்சந்திரன், பாஸ்கர் மற்றும் அண்ணாமலை ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் உறுதியாக தெரிவித்தார் வீரலட்சுமி.