வீரப்பனின் கூட்டாளிகள் விடுதலை : தமிழக அரசு அதிரடி
வீரப்பனின் கூட்டாளிகள் 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
30 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை
கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் ஆளுநர் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு கோரிக்கை
30 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்யுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
காலம் தாழ்த்தி ஒப்புதல்
பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த திமுக அரசின் பரிந்துரைக்கு காலம் தாழ்த்தி ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
