இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய மாநில செயலாளர் - யார் இந்த மு.வீரபாண்டியன்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மு.வீரபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக 2015 ஆம் ஆண்டில் முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது அவருக்கு 79 வயதாகி விட்டதாலும், 3 முறை இந்த பதவியில் இருந்ததாலும், புதிய செயலாளரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் டி.ராஜா, முத்தரசன் உள்ளிட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
மு.வீரபாண்டியன் முன்னதாக கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தார். மேலும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினுடைய மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
முதல்வர் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) September 13, 2025
இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி… https://t.co/n7dpqqCVIL
இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி! ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!" என தெரிவித்துள்ளார்.