18 மணிநேரம் இருட்டில் தள்ளிவிட்டவர்கள் திமுக: அமைச்சர் கி.வீரமணி கடும் தாக்கு
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் வெளியே நடமாட முடியாது என வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னவேப்பம்பட்டு, செட்டியப்பணுர், நெக்குந்தி, மண்டல வாடி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் 1000- த்திற்கும் மேற்பட்ட பெண்கள் வழி நெடுகிலும் மலர் தூவி, ஆர்த்தி எடுத்து வரவேற்றனர்.
தமிழகத்தை இருளில் விட்டது போதாதா? தமிழகத்திற்கு எளிமையான முதலமைச்சர் கிடைத்துள்ளார். மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு ஆட்சி நடத்துகிறார். என்ன குறை இருக்கிறது ஆட்சியில் என கேள்வி எழுப்பினார். திமுகவிற்கு தாய்மார்கள் வாக்களிக்காதீர்கள் திமுக வின் அராஜகம் ஆட்சி மீண்டும் வேண்டுமா.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் வெளியே நடமாட முடியாது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தை ஒரு நாளைக்கு 18மணி நேரம் இருட்டில் தள்ளிவிட்டு சென்றவர்கள் திமுகவினர்.
இருண்ட தமிழகத்தை மீட்டது அதிமுக அரசு எனவே திமுகவிற்கு தாய்மார்கள் வாக்களிக்காதீர்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார்.