என்ன வேணுமோ அதை ஓபனா கேளுங்க; சீமானை பகைச்சுக்கிட்டேன் - விளாசிய வீரலட்சுமி!
உங்களுக்காகதான் சீமானை பகைத்துக் கொண்டேன் என வீரலட்சுமி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நடிகை வீடியோ
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது.
தொடர்ந்து, தனக்காக போராட யாருமே இல்லை எனக்கூறிய நடிகை விஜயலட்சுமி, இந்த வழக்கில் இனி போராட தான் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு உண்ணாவிரதம் அறிவித்திருந்த தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் பெட்டிஷன் போடுவதற்கு வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். உங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் திடீரென எதற்குமே வரமாட்டேன்.
கொதித்த வீரலட்சுமி
யாருமே எனக்காக பேசவில்லை என வீடியோ போட்டுள்ளீர்கள். சீமானுக்கும் எனக்கும் கருத்தியல் ரீதியாக தான் பிரச்சனை. அதை நான் அரசியல் ரீதியாக பார்த்துக் கொள்வேன். நான் உங்களுக்காக தான் சீமானை பகைத்துக் கொண்டேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.
சீமான் தான் உங்களை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதைச் சொல்லி தமிழ்நாட்டு மக்களிடையே ஆதரவு தளத்தை உருவாக்கி வருகிறோம். ஆனால் ஆதரவு தளத்தை ஒரு வீடியோ மூலமாக தவறாக பேசுகிறீர்கள். நீங்கள் பேசிய வீடியோவிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நானும் ஹெல்ப் பண்ண முடியாது. நாட்டு மக்களும் ஹெல்ப் பண்ண மாட்டார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.