படுதோல்வியை ஒப்புக்கொண்ட சீமான்...மறுபடியும் சீண்டும் வீரலட்சுமி..!!
பூனை கூப்பிட்டால் புலி சண்டைக்கு போகுமா என சீமான் வீரலட்சுமிக்கு பதிலடி கொடுத்துள்ள நிலையில், அதற்கு தற்போது வீரலட்சுமி மீண்டும் பதிலளித்துள்ளார்.
Challenge பண்ண வீரலட்சுமி
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக போலீஸில் புகார் அளித்தார்.இதற்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி ஆதரவாக செயல்பட்டார். சீமானை வீரலட்சுமி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, தன் மீது அவதூறாக பேசிய வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற சீமான் பேச்சுக்கு, சீமான் தான் தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீரலட்சுமி கூறினார்.இந்நிலையில், ஊடகவியலாளர்கள் மத்தியில் வைக்கப்படும் மைக் முன்னாடி பேசும் போது தான் உங்களுக்கு வீரம் வருமா? என் கணவருடன் நீங்கள் சண்டை போட வேண்டிய இடத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
இந்த மைதானம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் நீங்கள் பாக்ஸிங் பண்ண வேண்டும். காணும் பொங்கல் அன்று என் கணவருக்கும் , உங்களுக்கும் இங்கு தான் சண்டை நடக்கப் போகிறது. இந்த சண்டையில் பாக்சிங் ,கராத்தே ,குங்ஃபூ, மல்யுத்தம் எந்த சண்டை வேண்டுமானாலும் போடலாம். அதை சமாளிக்க தயாராக இருக்கிறார்.
சீமான் பதிலடி
இந்த வீடியோ வைரலான நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, பூனை சண்டைக்கு கூப்பிட்டால், புலி போகுமா? என பதிலடி கொடுத்தார்.
மேலும், அவர்கள் தன்னை பற்றி பேசுவதும், அவர்களை குறித்து தான் பேசுவதும் தனக்கு சிறுமையே என குறிப்பிய சீமான், தன்னை எதிர்ப்பவர்கள் தன் எதிரியல்ல என கூறி தான் யாரை எதிர்க்கிறேனோ அவரே தன்னுடைய எதிரி என குறிப்பிட்டு அதனை தான் முடிவு செய்து விட்டு தற்போது பயணிப்பதாக கூறினார்.
சீமான் படுதோல்வி
இந்நிலையில், இது குறித்து தற்போது மீண்டும் வீரலட்சுமி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தான் நேரடியாக சீமான் கேட்டுக்கொண்டது போல, இடம் தேதி என அனைத்தையும் அறிவித்த பிறகும், சீமான் மாற்றி பேசி போட்டியில் இருந்து பின்வாங்கியதன் காரணமாக அவர் படுதோல்வி அடைந்து விட்டார் என கூறி தாங்கள் வெற்றி பெற்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் சூழலில் இது குறித்து, நாம் தமிழர் கட்சி சீமான் என்ன பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இவர்களின் பிரச்சனைக்கு எப்போது தான் முடிவு வரும் என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றது.