மீசை வச்ச ஆம்பளையா சீமான் இருந்தால்...சவால் விடும் வீரலட்சுமி..!!
நடிகை விஜயலக்ஷ்மி விவகாரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி, சீமான் மீசை வைத்த ஆம்பளையா இருந்தால் விசாரணைக்கு ஆஜராகும் படி சவால் விடுத்துள்ளார்.
சவால் விட்ட வீரலட்சுமி
இன்று காவல் துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி, ‘’நடிகை விஜயலட்சுமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால், அவரை பாதுகாத்து வருவதாகவும், விஜயலட்சுமி வழக்கில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை அளித்தால் தான் சம்மனுக்கு ஆஜராவேன் என சீமான் கூறியிருப்பது முட்டாள்தனமானது என விமர்சனம் செய்த வீரலட்சுமி, சீமானுக்கு பயம் வந்துவிட்டது என குறிப்பிட்டு, நல்ல மீசை வெச்ச ஆம்பளையா இருந்தால் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே... ஏன் பயப்பட வேண்டும்? என கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
முகத்தை உலகறியச் செய்வேன்
இன்றைக்கு சீமானின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுகிறார்கள் என்றும் இந்த மிரட்டல்களுக்கு தான் அஞ்சமாட்டேன் என் தடாலடியாக கூறி, சீமானின் உண்மை முகத்தை உலகறியச் செய்வேன் ஆவேசமாக கூறினார்.
முன்னதாக இன்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில், வீரலட்சுமி புகார் அளிக்க வந்திருந்த அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியினரும் வீரலட்சுமி மற்றும் விஜயலக்ஷ்மி மீது புகார் அளிக்க வந்த நிலையில், இரு தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.