விஜய் திரிஷா'வ பரிசோதனை செய்யணும்? கொக்கைன் எப்படி வந்துச்சு - போலீசில் பரபரப்பு புகார்
பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாக சினிமா துறையை சேர்ந்த பலரை குறித்தும் திடுக்கிடும் தகவல்களை கூறி வருகின்றார். அவர் இவ்வாறு கூறுவது உண்மையா? என்பது தெரியாத சூழலிலும், தொடர்ந்து அவரின் பேட்டிகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
நடிகர்கள் விஜய், தனுஷ் போன்றவர்களை நேரடியாக குற்றம்சாட்டியிருக்கும் சுசித்ரா நடிகை திரிஷா குறித்தும் பேசியுள்ளார். இந்த சூழலில் தான், அவரின் பேட்டிகளின் அடிப்படையில் நடிகர் விஜய்யை விசாரிக்க வேண்டும் என வீரலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையில் இது குறித்து அவர் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியது வருமாறு, பிரபல நடிகர்கள் நடிகர் விஜய், தனுஷ், விஜய் யேசுதாஸ் நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் ஆகியோரின் நடிகர் விஜய்யின் வீட்டில் அளிக்கப்பட்ட விருந்துகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கொக்கேன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா பல்வேறு Youtube சேனலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆதாரம் இருப்பதால் தான், போதைப்பொருளை பயன்படுத்துகிறார் என சுசித்ரா தெரிவித்துள்ளார். வெளிப்படையாக பாடகி ஒருவர் பிரபலமான நடிகர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், இதில் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவர்களுக்கு யார் இந்த போதைப்பொருளை விநியோகித்தார்கள் என்பதையும் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யணும். விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.