ஸ்டெர்லைட்டில் உற்பத்தி நிறுத்தம்: ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தியது ஸ்டெர்லைட்

thoothukudi TNGovt Sterlite vedanta
By Irumporai Jul 30, 2021 12:57 PM GMT
Report

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய போது நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட்டில் உற்பத்தி நிறுத்தம்: ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தியது ஸ்டெர்லைட் | Vedanta Shuts Down Its Oxygen Plant Sterlite

இந்த நிலையில் ஆலையின் உற்பத்தி நாளையுடன்முடிவடைகிறது. அதனால், ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இம்மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.

ஆகவே ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை' என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இம்மனு மீதான உத்தரவை ஒரு வாரத்தில் பிறப்பிப்பதாக கூறி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.