கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியிடம் காதலை வெளிப்படுத்திய அர்ஜுன் - வைரலாகும் புகைப்படம்
கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியிடம் காதலை வெளிப்படுத்திய அர்ஜுனின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேதா கிருஷ்ணமூர்த்தி
பெங்களூரு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. இவர் இதுவரை 48 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 829 ரன்களும், 76 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 875 ரன்களையும் எடுத்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, கொரோனா காலத்தில் இவருடைய சகோதரியும், தாயாரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், சோகத்திற்கு ஆளான வேதா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் தற்போது அவருடைய ஆண் நண்பரான, கிரிக்கெட் வீரர் அர்ஜுன் ஹொய்சாலாவை திருமணம் செய்ய உள்ளார் வேதா கிருஷ்ணமூர்த்தி. இது குறித்து அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வேதா கிருஷ்ணமூர்த்தியின் முன் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறார்.
பின்னர் அவருக்கு மோதிரம் அணிவிக்கிறார். அந்த பதிவில், தனது காதலை வேதா கிருஷ்ணமூர்த்தி ஏற்றுக்கொண்டார் என்று அர்ஜுன் தெரிவித்திருக்கிறார். தற்போது இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Veda Krishnamurthy and Arjun Hoysala announced their engagement on Instagram ?
— Female Cricket (@imfemalecricket) September 11, 2022
Congratulations you both ? #CricketTwitter pic.twitter.com/iccGyFbtjZ