இந்து ராஷ்ட்ரம் என்பது பிராமண ராஷ்ட்ரம் : திருமாவளவன் கருத்து

Thol. Thirumavalavan
By Irumporai Jun 12, 2023 04:42 AM GMT
Report

இந்து ராஷ்ட்ரம் என்பது அடிப்படையில் அது பிராமண ராஷ்ட்ரம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

திருமாவளவன் பேச்சு

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவேந்தல் நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் மேலும் கூறியதாவது: மொழிவழி தேசியம் இங்கே வலுப்பெற்றால் சமஸ்கிருத தேசியம் என எதுவும் உருவாகாது.  

இந்து ராஷ்ட்ரம் என்பது பிராமண ராஷ்ட்ரம் : திருமாவளவன் கருத்து | Vck Thirumavalavan Says About Hindu Rashtra

பிராமண ராஷ்ட்ரம்

சமற்கிருதத்தை தங்களின் தாய்மொழியென நம்புவோருக்கு இங்கே அம்மொழிக்கென தனியே தாய்மண் ஏதும் இல்லை. அதனால் அவர்கள் பிற்காலத்தில் தனிமைபட்டு வீழ்ச்சி அடைவர். அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அவர்கள் இந்துராஷ்டரம் என்னும் திட்டத்தை முன்னிறுத்துகின்றனர். 

அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவையே தங்களின் தாய்மண்ணாக்கிக் கொள்ளும் சூது நிறைந்த மறைமுக செயல்திட்டம் தான் அவர்களின் இந்து ராஷ்ட்ரம் என்பதாகும். அடிப்படையில் அது பிராமண ராஷ்ட்ரம் என்பதேயாகும்.