சுட்டுத் தள்ளுங்கள் என சொன்ன அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் - கொந்தளித்த திருமாவளவன்
அண்ணாமலை பேசியபோது அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் பேச வேண்டும்
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்கள் எப்போதும் தம்மை பற்றிய பேச வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் என்றும் தன்னை முன்னிறுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.

தமிழக அரசியலில் எப்போதும் ஊடகங்கள் தன்னைப் பற்றிய பேச வேண்டும் என்று ஒரு வகையான மேனியா அவருக்கு இருக்கிறது என்பதை உணர முடிகிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
வழக்கு பதிய வேண்டும்
பரபரப்பாக எதையாவது பேச வேண்டும் என்பதற்காக அரசுக்கு எதிரான அவதூறுகளை அண்ணாமலை பரப்பி வருகிறார் என்றும் ராணுவ வீரர்களுக்கு சுட்டு தள்ளுங்கள் தமிழக பாஜக பார்த்துக் கொள்ளும் என்று அவர் கட்டளையிட்ட போதே காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தற்போதாவது அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.