தவெக அரசு மீது விசிக ஊழல் குற்றச்சாட்டு - பின்னணியில் அமைச்சரின் மாமனார்?

Vijay Government of Tamil Nadu
By Karthikraja Jun 30, 2026 03:15 PM GMT
Report

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் விசிகவும் அங்கம் வகிக்கிறது. விசிக எம்எல்ஏ வன்னியரசு, சமூகநீதித்துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், தவெக அரசு மீது விசிக பொருளாளர் எஸ்,எஸ்.பாலாஜி ஊழல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தவெக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சமீபத்தில் வெளியிடப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் இடமாற்றப் பட்டியலில் அதிகார துஷ்பிரயோகம் குறித்த கடுமையான புகார்கள் இருப்பதால், 'ஊழலற்ற அரசு' என்ற தவெகவின் கூற்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

தவெக அரசு மீது விசிக ஊழல் குற்றச்சாட்டு - பின்னணியில் அமைச்சரின் மாமனார்? | Vck Ss Balaji Corruption Accuse On Tvk Govt

தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவின் மாமனாரும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) ஓய்வுபெற்ற உறுப்பினர் செயலாளருமான விஜயபாஸ்கர் இதற்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் “ஊழலற்ற ஆட்சி” என்ற கூற்றை நிலைநிறுத்த இதில் தலையிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், "கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா?

நேற்றைய கூட்டணியை பற்றி இன்றுதான் சொல்லமுடியும் என்றால் இன்றைய கூட்டணியை பற்றி நாளைதான் சொல்ல வேண்டி வரும் என்றாகாதா?

“ANYONE CAN BE ACCUSED EVERYONE ACCUSED DESERVE A FAIR TRAIL”

நேர்மையான அரசியல் என்பது சார்ந்துள்ள கூட்டணி நலனை முன்னிறுத்துவதா? அல்லது தன்னை நம்பி சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்துவதா?

ALLIANCE INTEREST? OR THE INTEREST OF PEOPLE? WHICH MUST BE THE LARGER INTEREST?" என தெரிவித்துள்ளார். 

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் அலுவலகம் என்னைத் தொடர்புகொண்டு, கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததாகவும், அரசு தரப்பிலிருந்து கிடைத்த விரைவான பதிலை மிகவும் பாராட்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.