வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் பெண்ணை தாக்கிய விசிக பிரமுகர் - விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் புதிய பேருந்துநிலையத்தில் விசிக பிரமுகர் ரஸ்க் வாங்கிவிட்டு பணம் தரமறுத்ததோடு பெண்ணை தாக்கிய சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தனசேகரன் என்பவர் டீ, மற்றும் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் கடையில் உஷா, பிரியங்கா ஆகிய இருவர் பணியிலிருந்துள்ளனர்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த ராஜபாண்டியன் என்பவரது சகோதரி கடையில் ரஸ்க் பாக்கெட்டை எடுத்து ஆட்டிற்கு கொடுத்துவிட்டு பணம் தராமல் செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து கடையில் பணியில் இருந்த பெண் ஊழியரான பிரியங்கா பணம் கேட்டதற்கு ”பணம் தரமுடியாது தன்னிடம் பணம் கேட்டால் புதிய பேருந்து நிலையத்தில் கடையே நடத்தமுடியாது” என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அருகில் உள்ள வழுதரெட்டிக்கு சென்று தனது உறவினர்களை அழைத்து வந்து கடையில் சண்டையிட்டுள்ளார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த ராஜபாண்டியன் மற்றும் அவரது சகோதரி பெண் கடை ஊழியரை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடை ஊழியர்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விசிக பிரமுகர் பெண் கடை ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.