திமுக கூட்டணியில் சலசலப்பு: ஆட்சியில் பங்கு- தொல்.திருமாவளவன் சொல்வது என்ன?
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை விசிக கைவிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் சலசலப்பு
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

பாஜக எதிர்ப்பு மற்றும் மதசார்ப்பற்ற திமுக கூட்டணி கடந்த 2016ம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியின் முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் பங்கு என்ற புதிய கோரிக்கையை கையில் எடுத்துள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி திமுக கூட்டணிக்கும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய தவெக தலைவர் விஜய், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக தங்களது முதல் மாநாட்டில் அறிவித்ததை அடுத்தே தமிழக கட்சிகளுக்கு இந்த கோரிக்கை வலுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் கருத்து
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக கட்சி தலைவர் திருமாவளவன், திமுக தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழக மக்களின் நன்மதிப்பை திமுக அரசு பெற்று இருப்பதாகவும் பாராட்டினார்.
அப்போது ஆட்சியில் பங்கு குறித்து கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களுக்கான நோக்கமும் இருப்பதாகவும், கூட்டணி கட்சியிடம் கோரிக்கை வைப்பது அவர்களது இயல்பு என்றும் தெரிவித்தார்.
அத்துடன் விசிக தொடங்கப்பட்டதில் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் கட்சியின் கோரிக்கை, ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை சாத்தியப்படுத்தும் சூழல் இல்லை என்பதை உணர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தி வலதுசாரிகளுக்கு வாய்ப்பு வழங்கி விட கூடாது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, ஆனால் அதை கைவிடவும் இல்லை, காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கு உரிமை உள்ளது. இதனால் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விடும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், இருவரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வை எட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil