விஜயின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் பாராட்டத்தக்கது : திருமாவளவன் கருத்து

Thol. Thirumavalavan DMK
By Irumporai Jun 17, 2023 11:05 AM GMT
Report

நடிகர் விஜயின் கல்வி தொடர்பான செயல்பாடு பாராட்டத்தக்கது என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விஜய் மாணவர்கள் சந்திப்பு

நடிகர் விஜய் 12ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார்.

விஜயின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் பாராட்டத்தக்கது : திருமாவளவன் கருத்து | Vck Leader Thirumavalavan Praises Actor Vijay

அதன்படி இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விஜயின் இந்த பேச்சுக்கு பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

திருமாவளவன் பாராட்டு

இந்த நிலையில், நடிகர் விஜயின் கல்வி தொடர்பான செயல்பாடுகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன்,நடிகர் விஜய்யின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.

விஜய்யின் செயல்பாடு மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அம்பேத்கர் உள்ளிட்ட சமூகநீதி தலைவர்களை படியுங்கள் என விஜய் வழிகாட்டியிருப்பதற்கு பாராட்டு என தெரிவித்துள்ளார்.