விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுகிறதா? விசிக விளக்கம்

Vijay Thol. Thirumavalavan Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 09, 2026 08:54 AM GMT
Report

விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாக வெளியான தகவலுக்கு விசிக தரப்பு விளக்கமளித்துள்ளது.

தவெகவிற்கு விசிக ஆதரவு?

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது.  

விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுகிறதா? விசிக விளக்கம் | Vck Denies Seeking Positions Demands From Tvk

5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெக கூட்டணியில் இணைந்தது.

மேலும், தலா 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது.

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக நேற்று அறிவித்து ஆதரவு கடிதத்தை அளித்தன. 

விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுகிறதா? விசிக விளக்கம் | Vck Denies Seeking Positions Demands From Tvk

தற்போது 116 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ள நிலையில், 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விசிக இன்று காலை 11 மணிக்கு தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தது.

தற்போது மாலை 4 மணிக்கு தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவையே விசிகவும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுகிறதா? விசிக விளக்கம் | Vck Denies Seeking Positions Demands From Tvk

இதனையடுத்து, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் ஏரளாமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

பதவிகள் கேட்ட விசிக?

"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம் இனி உயர்வோம் மேலும் மேலும்" என விசிக துணை பொதுச்செயலாளரும், திண்டிவனம் எம்.எல்.ஏ.வுமான வன்னி அரசு பதிவிட்டிருந்தார். 

இதனையடுத்து, தவெகவிடம் பதவி கேட்டு பேரம் நடப்பதாலே விசிக அறிவிப்பை வெளியிட தாமதம் செய்வதாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், பேரம் நடப்பதாக வெளியான தகவலுக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை.

ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.