அரசியல் புரோக்கர்களின் வேலை...திமுகவுடன் கூட்டணி விரிசலா..? வன்னி அரசு பதிலடி

M K Stalin Thol. Thirumavalavan Tamil nadu DMK
By Karthick Sep 26, 2023 09:38 AM GMT
Report

அதிமுகவுடன் கூட்டணிக்கு விடுதலை கட்சி மாறுவதாக நேற்று முதல் கருத்துக்கள் அதிகளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு அக்கட்சியின் வன்னி அரசு பதிலளித்துள்ளார்.

கூட்டணி சர்ச்சை

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகி நிலையில், அக்கட்சி தலைமையில் புதிய கூட்டணி தமிழகத்தில் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுவார்கள் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றது.

vck-confirms-alliance-with-dmk

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில், இதற்கு வன்னி அரசு பதிலடி கொடுத்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வன்னியரசு ட்வீட்

இது குறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், திமுக தலைவர் ஸ்டாலினை போல, பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? என வினவி, அம்பேத்கர் பெரியார்,அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி திருமா அவர்கள் களமாடுகிறாரோ அப்படித்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர் என பதிவிட்டு, திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது என்றும் பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.என பதிவிட்டு, அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது என பகிர்ந்துள்ளார்.