இன்று முடிவை அறிவிக்கிறது விசிக: போலிசார் குவிப்பு
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவடுத்தது.
தொடர்ந்து ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் ஆதரவு அளித்தது, தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் விசிக இன்று தன்னுடைய நிலைப்பாடு குறித்து அறிவிக்கிறது.
திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விசிக தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு வழங்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது திருச்சி கிழக்கு தொகுதியில் தொல்.திருமாவளவனை போட்டியிட வைக்க வேண்டும் என்றும், அமைச்சரவையில் இடம்தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாம்.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் வருகை தரவுள்ளதால் போலிசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி! IBC Tamil