வாவா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம் - வெளியான புதிய தகவல்

snake Update Recover Vava Suresh Catcher
By Thahir Feb 04, 2022 12:08 PM GMT
Report

பிரபல பாம்பு பிடி ஆர்வலரான வாவா சுரேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ்.இவர் வன உயிரின ஆர்வாலராக செயல்பட்டு வருகிறார்.

பாம்பை கண்டால் படையே நடங்கும் என்பார்கள் ஆனால் எந்த அச்சமுமின்றி சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளை பிடித்திருக்கிறார். அதில் அவர் 200க்கும் அதிகமான ராஜநாக பாம்புகளை பிடித்துள்ளார்.

எந்த கருவிகளும் இல்லாமல் வெறும் கைளால் பாம்புகளை லாவகமாக பிடிப்பதில் வல்லவராக இருந்து வந்தார். கொடிய வகை பாம்புகளும் வாவா சுரேஷின் கைகளில் பிடிபட்டு அவரின் சொல்படி அடங்கி போகும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷுக்கு தகவல் வந்துள்ளது.

அதன்படி, அந்த வீட்டுக்கு விரைந்து சென்ற வாவா சுரேஷ், அங்கு பதுங்கியிருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேஷின் வலது காலில் கடித்தது. அதன் தொடர்ச்சியாக, சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாவா சுரேஷிற்கு அம்மாநில அரசு தேவையான சிகிச்சைகளை அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் வாவா சுரேஷ் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசித்து வருவதாகவும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் என்பதால் அவரை தீவிர சிகிச்சை பிரிப்பில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

You May Like This